உள்ளூர் செய்திகள்
நாகை நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

நாகை நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2022-01-31 19:31 IST   |   Update On 2022-01-31 19:31:00 IST
நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டப்பேரவையில் பேசியதோடு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்தேன். அதன் அடிப்படையில், நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் அவர்களுக்கும், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை நிறைவேற துணை நின்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நன்றி கூறியுள்ளார்.

Similar News