உள்ளூர் செய்திகள்
நாகை அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் இரண்டு கதவை உடைத்து திருட முயற்சி

நாகை அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் இரண்டு கதவை உடைத்து திருட முயற்சி

Published On 2022-01-31 19:12 IST   |   Update On 2022-01-31 19:12:00 IST
மூன்றாவது கதவை உடைக்க முடியாததால் டாஸ்மார்க் கடையில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான மதுபானங்கள் தப்பியது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இதுகுறித்து கீழ்வேளூர் காவல் துறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 

போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததும், மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் கொள்ளை கும்பல் தப்பி சென்று இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து டாஸ்மாக் மேலாளரிடம் புகாரை பெற்ற கீழ்வேளூர் போலிசார் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெயின் கதவை உடைக்க முடியாமல் திருடர்கள் திரும்பி சென்றதால், டாஸ்மாக் கடையின் கல்லாவில் இருந்த 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணமும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் தப்பித்தது..

Similar News