உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே வாலிபர் தற்கொலை
விருதுநகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 32). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த ஜோதீஸ்வரி என்பவ ருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.- இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
சில ஆண்டுகளாக சுரேஷ்குமார் ஆலமரத்துப்பட்டியில் தனது மாமியார் வீட்டு அருகே வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தினர் சமரசம் செய்தும் பலனில்லை.
இந்த நிலையில் ஜோதீஸ் வரி விவாகரத்து கேட்டு சுரேஷ்குமாருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதனால் வேதனை அடைந்த சுரேஷ் குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி நேற்று மாலை விருதுநகர் அருகே உள்ள சோரம்பட்டிக்கு வந்த அவர், அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது கொல்லத்தில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது ஏறியது. இதில் தலை நசுங்கி சுரேஷ்குமார் கொடூரமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.