உள்ளூர் செய்திகள்
இளம்பெண் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

தற்கொலை செய்த இளம்பெண் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

Published On 2022-01-31 16:00 IST   |   Update On 2022-01-31 16:00:00 IST
அருப்புக்கோட்டை அருகே தற்கொலை செய்த இளம்பெண் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக பெற்றோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பாலையம்பட்டி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி புதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களது மகள் பரமேஸ்வரி.  பிளஸ்-2 முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரமேஸ்வரி  விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பரமேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற் றோர் தற்கொலை குறித்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் நேற்று இரவே பரமேஸ்வரியின் உடலை சுடுகாட்டில்  எரித்ததாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீ சார் விசாரணை நடத்தி தற்கொலை செய்த இளம் பெண்ணின் உடலை சட்ட விரோதமாக எரித்ததாக பரமேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News