உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தட்டான்குளம்பட்டியை சேர்ந்தவர் மாயச்செல்வி. இவரது மகள் ஹரி வித்யா (வயது 13). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் தனியார் மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஹரி வித்யா டிவி, செல்போன் அடிக்கடி பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனை தாயார் கண்டித்ததாராம். இதனால் மனம் உடைந்த ஹரி வித்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஹரி வித்யாவை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹரி வித்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாயார் மாயச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.