உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே விபத்தில் தொழிலாளி சாவு
அருப்புக்கோட்டை அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
பாலையம்பட்டி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து லோடு வேன் புறப்பட்டது. மதுரையில் சரக்குகளை இறக்கி விட்டு இன்று அதிகாலை அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் சாயல்குடி நோக்கி கொண்டிருந்தது.
அந்த வேனை சாயல்குடியைச் சேர்ந்த வேல்முருகன் ஓட்டினார். அருப் புக்கோட்டை புறவழிச்சாலையில் இருந்து திரும்பி காந்திநகர் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேன் மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அருகில் அமர்ந்திருந்த சாயல்குடி அருகே உள்ள சத்திரம் பகுதியை சேர்ந்த இளந்தடியான் (வயது 45) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் வேல்முருகன் மற்றும் சாந்தகுமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந் தவர்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர். பின்னர் அவர் களை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நவீன கருவிகள் மூலம் வேனில் சிக்கி இருந்த இளந்தடியானின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.