உள்ளூர் செய்திகள்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி
திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர்
ஊராட்சியை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்களுக்கு
தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன்
தலைமை வகித்தார்.
திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி
முன்னிலை வகித்தார்.
இதில் புதுச்சேரி யாழ் தேனீ பயிற்சி மைய நிர்வாகிகள் விஜயகுமார், உதயகுமார், திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், திருக்கண்ணபுரம் தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிக்குமார்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.