உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2022-01-31 15:02 IST   |   Update On 2022-01-31 15:02:00 IST
வேதாரயண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு கிராம 
நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம், புதிய 
நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு 
சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

நாகை மாவட்ட தலைவர் ரங்கநாதன், செயலாளர் செல்வம், 
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பாலச்சந்திரன், 
செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஜெயபிரகாஷ், 
வேதாரண்யம் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் 
ரங்கநாதன், ஐயப்பன், உதயகுமார், முன்னாள் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மங்களதாஸ், நாகூரான், சுந்தர்ராஜன் 
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், 
வருவாய் நிர்வாகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு 
வருவதால் கால சூழ்நிலைக்கு ஏற்ப கிராம நிர்வாக 
அலுவலரின் அடிப்படை கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆக உயர்த்த வேண்டும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமங்களின் எல்லைகளை 
வரையறை செய்து புதிய கிராமங்களை உருவாக்க வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலர்களின் வட்ட தேர்தலை 
பிப்ரவரி மாதத்திலும், மாவட்ட தேர்தல் மார்ச் மாதத்திலும் 
நடத்தப்படும். 

மே மாதம் வேதாரண்யத்தில் சங்க மாநில மாநாடு நடத்துவது 
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News