உள்ளூர் செய்திகள்
.

அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

Published On 2022-01-31 12:43 IST   |   Update On 2022-01-31 12:43:00 IST
தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தருமபுரி:

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி நகரில் ஏற்கனவே போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் 4 போலீசார் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர்.

இதேபோல் காரிமங்கலம், பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 10 போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தருமபுரி நகரில் போலீசார், உள்ளாட்சி தேர்தலையொட்டி இரவு& பகலாத பணியாற்றி வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News