உள்ளூர் செய்திகள்
பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்

கீழக்காவட்டாங்குறிச்சி அரசு பள்ளி வளாகத்தில் கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை

Published On 2022-01-31 12:14 IST   |   Update On 2022-01-31 12:14:00 IST
அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங் குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இந்தப் பள்ளியில் 476 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

அண்மையில் பாம்புகள் உள்ளிட்ட  விஷ ஜந்துகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் மாணவர்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.  பின்னர்  பள்ளி  நிர்வாகத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு  தகவல் அளித்து பாம்புகள்  பிடிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலரும் நேரில் வந்து பார்வையிட்டார்.  பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக பள்ளியைச்  சுற்றி காடு போல்  வளர்ந்துள்ள  சீமை கருவேலமரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ஆனால் இது நாள் வரை சீமை கருவேல மரங்களை அகற்றிட எந்தவொரு நடவடிக்கையும்  எடுக்கப்பட வில்லை. இந்தநிலையில் நாளை (பிப்ரவரி 1&ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.  

மேலும் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதிய இடவசதி  இல்லை எனவும்  புதிதாக  கட்டிட வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும்  பள்ளியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வ லர்கள்,  பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News