உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வேதாரண்யத்தில் தை அமாவாசைக்கு புனித நீராடலாம்

Published On 2022-01-30 14:42 IST   |   Update On 2022-01-30 14:42:00 IST
வேதாரண்யத்தில் பக்தர்கள் தை அமாவாசைக்கு புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி கதவை திறந்ததாக வரலாறு.

இந்த திருத்தலத்தில் ஆடி, தை, மகாலய, மகோதய, அர்த்தோதய அமாவாசை போன்ற புண்ணியக் காலங்களில் ஏராளமான பக்தா¢கள் இங்கு வந்து கோடியக்கரை ஆதிசேது சித்தர் கட்டத்தில் புனித நீராடி பின்னர் வேதாரண்யம் சன்னதி கடலுக்கு வந்து புனித நீராடி மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு தை அமாவாசை நாளை 31.1.22 வருகிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வருவாய்த்துறை, நகராட்சி, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா கட்டுபாட்டை அனுசரித்து பக்தர்கள் சென்று வர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

புனித நீராட வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து நடக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Similar News