உள்ளூர் செய்திகள்
.

சேலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை- 63 பறக்கும்படை

Published On 2022-01-29 14:23 GMT   |   Update On 2022-01-29 14:23 GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்திட 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 63 பறக்கும்படைகள் நியமிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:

சேலம் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 1 மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு 1,519 வாக்குச்சாவடிகளில்  தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கென 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,519 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக புகார்கள் மற்றும் விபரங்கள் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004256077 லும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 0427-2414200 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளவும் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களையும் தெரிவிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் நடைபெற உள்ள நகர்ப்புற அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்திட 21 அணிகள் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
Tags:    

Similar News