உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சங்கராபுரம் அருகே 250 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Published On 2022-01-29 16:35 IST   |   Update On 2022-01-29 16:35:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரியூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளி பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக விரியூர் கிராமத்தைச் சேர்ந்த சவரிராஜ் (55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News