உள்ளூர் செய்திகள்
கைது

சிவகாசியில் கார் டிரைவர் கொலை

Published On 2022-01-29 16:12 IST   |   Update On 2022-01-29 16:12:00 IST
சிவகாசியில் மர்மமாக இறந்த கார் டிரைவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது50),  கார் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

கருப்பசாமிக்கு சொந்தமாக தேவர்குளத்தில் வீடு உள்ளது. 8 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டு பத்திரத்தை வைத்து தங்கபூபதி என்பவரிடம் ரூ.26 லட்சம் கடன் வாங்கியிருந்தனர்.

இந்தநிலையில் சிவகாசி ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் தாமோதரன் (வயது 39) என்பவர் அந்த வீட்டை, தான் வாங்கிவிட்டதாக கூறி கருப்பசாமி, அவரது மனைவி பாண்டிசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட கருப்பசாமி திடீரென இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி திருத்தங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், வீடு விவகாரம் தொடர்பாக தாமோதரன் எனது கணவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாகத்தான் அவர் இறந்திருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவத்தன்று கருப்பசாமியை தாமோதரன் தாக்கியது தெரியவந்தது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் இறந்துள்ளார். இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News