உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல்
கள்ளக்குறிச்சியில் கச்சிராபாளையம் சாலையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் கடந்த 26-ந் தேதி வெளியிட்டார். அதன்படி நேற்று முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் கச்சிராபாளையம் சாலையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் நகராட்சி பகுதியில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றியும், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.