உள்ளூர் செய்திகள்
வி‌ஷம்

சங்கராபுரம் அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2022-01-29 15:38 IST   |   Update On 2022-01-29 15:38:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கவிதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு பிரபாகரன் மறுத்தார்.

இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணனும் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News