உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வேளாண்துறை மானியம்

50 விவசாயிகளுக்கு வேளாண் துறை மானியம் வழங்கல்

Published On 2022-01-28 14:56 IST   |   Update On 2022-01-28 14:56:00 IST
மதுக்கூர் வட்டாரத்தில் 50 விவசாயிகளுக்கு வேளாண்துறை மானியம் வழங்கியது.
மதுக்கூர்:

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மூலம் மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு வேளாண் துறைகளுக்கான மானியங்கள் தஞ்சை மாவட்ட வேளாண் துணை 
இயக்குனர் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 7  கிராமங்களைச் சேர்ந்த தலா 7 விவசாயிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். 

தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் 
ரூ.5000 மானியமும் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் பத்து ஆடுகள் 
ஒரு பசு மாடு மற்றும் 10 கோழிகள் ரூ.31 ஆயிரத்து 500 மானியத்திலும் வழங்கப்பட உள்ளது

இத்துடன் மர வளர்ப்பிற்கு ரூ.250 ம் தீவனப்புல் மற்றும் விதைகள் ரூ.750 மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் 
பழக் கன்றுகள் வீட்டு காய்கறி தோட்டம் விதைகள் மற்றும் தேனீ வளர்ப்பு பெட்டிகள் 2 எண்கள் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. 

இவ்வாறு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் மூலம் ரூ.45 ஆயிரம் 50 சதம் மானியமாக வழங்கப் படுகிறது. 

வேளாண் துறையின் மூலம் வழங்கப்படும் நெல் சான்று விதை ஏஎஸ்டி16, நெல் நுண்ணூட்டம் சூடோமோனஸ் பவேரியா மற்றும் திரவ அசோஸ் பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வரப்பில் உளுந்து சாகுபடிக்காக 3 கிலோ ஆடுதுறை 5 உளுந்து ஆகியவை தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் பாலசரஸ்வதி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் தினேஷ் மற்றும் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா, ஐயா மணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News