உள்ளூர் செய்திகள்
சுதந்திரப் போராட்ட வீரரின் புகைப்பட கண்காட்சி.

உப்புசத்தியாகிரக கட்டிடத்தில் புகைப்பட கண்காட்சி திறப்பு

Published On 2022-01-28 14:35 IST   |   Update On 2022-01-28 14:35:00 IST
வேதாரண்யத்தில் உப்புசத்தியா கிரக கட்டிடத்தில் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய வேதாரண்யம் பகுதி தியாகிகள் சர்தார் வேதரத்தினம், நாவிதர் வைரப்பன், நாகநாத தேசிகர், வீரபத்திரன், மாரிமுத்து, சுப்பையா பிள்ளை, ஐ.என்.ஏ. தியாகி பெரியசாமி, செம்போடை கணேசன் ஆகியோர் புகைப்பட கண்காட்சி திறப்புவிழா நடைபெற்றது.

கண்காட்சியை முன்னாள் எம்.பி. பி.வி ராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் நிர்வாகி வேதரத்தினம், உப்பு உற்பத்தியாளர் கேடிலியப்பன், உப்பள தொழிலாளர்கள் சங்க 
துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன் உள்பட 
பலர் கலந்து கொண்டனர்.

Similar News