உள்ளூர் செய்திகள்
ராஜபாளையத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
ராஜபாளையத்தில் 136 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது முத்தா நதியை சேர்ந்த ஜான் (வயது 45) என்பவர் தனது பெட்டிக்கடையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 133 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து ஜானை கைது செய்தனர்.
அருப்புகோட்டை டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு ரோந்து சென்றபோது சொக்கலிங்கபுரம் பகுதியில் நாகம்மாள் (60) என்பவர் தனது பெட்டிகடையில் 3 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து நாகம்மாளை கைது செய்தனர்.
இதேபோல் வீரசோழனை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவரிடம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.