உள்ளூர் செய்திகள்
மேலபுலம் அரசு பள்ளியில் ஆய்வகம் திறக்கப்பட்ட போது எடுத்த படம்.

மேலபுலம் அரசு பள்ளியில் ஆய்வகம் திறப்பு

Published On 2022-01-27 15:25 IST   |   Update On 2022-01-27 15:25:00 IST
நெமிலி அடுத்த மேலபுலம் அரசு பள்ளியின் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மத்திய அரசின் நிதி ஆயோக் உதவி மூலம் ரூ.12 லட்சம் செலவில் கட்டப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகத்தினை நெமிலி ஒன்றிய குழுதலைவர் வடிவேலு திறந்து வைத்தார்.

இந்த ஆய்வகம் ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இப்பள்ளிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. 

இந்த ஆய்வகத்தில் உள்ள உபகரணங்களின் மூலம் மாணவர்களின் அறிவியல் புதுமைகள் மற்றும் படைப்புகளை நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வகத்தினை பிற பள்ளி மாணவர்களும் முன் அனுமதியைப் பெற்று ஆய்வகத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் தி.பரமேசுவரி, ஆய்வக பொறுப்பாசிரியர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News