உள்ளூர் செய்திகள்
மாடல் அலங்கார ஊர்தியை வடிவமைத்து ஊர்வலமாக ஓட்டி சென்று தேசப்பற்றினை வெளிப்படுத்திய சகோதரிகள்.

குடியரசு தின விழாவில் தேசப்பற்றை வெளிப்படுத்திய சகோதரிகள்

Published On 2022-01-27 14:02 IST   |   Update On 2022-01-27 14:02:00 IST
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியின் மாடல் அலங்கார ஊர்தியை வடிவமைத்து ஊர்வலமாக ஓட்டி சென்று தேசப்பற்றினை சகோதரிகள் வெளிப்படுத்தினர்.
பெரம்பலூர்:

தமிழகத்தின் பாரம்பரிய, கலாச்சார, தேசப்பற்று  தலைவர்களின் அலங்கார ஊர்தி ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்.

ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசின் அலங்கார அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை. இது பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சூரியகலா தம்பதியினரின் மகள்களான சிற்பக்கலா (13), இன்பகலா (8) ஆகிய இரண்டு மாணவிகள் உள்ளனர்.

சிறு வயது முதலே தேசத்தின் மீது பற்று கொண்டவர்களாக வளர்ந்தனர் இதையடுத்து அவர்கள் இந்த குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தங்களது பங்களிப்பை செலுத்த முடிவு செய்தனர்.

அதன்படி குடியரசு தின விழாவையொட்டி தேச தலைவர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி. மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் அடங்கிய சிறிய வடிவிலான கலாச்சார ஊர்தியை டிராக்டருடன் அலங்கரித்து அதனை கொண்டு வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக ஓட்டி சென்றனர்.

இதனை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

Similar News