உள்ளூர் செய்திகள்
உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் துணைவேந்தர் மரியாதை
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் துணைவேந்தர் மரியாதை செலுத்தினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் சுதந்திரதின 75-ம் ஆண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு விழாவை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி வேதரெத்தினம் பேரன் கயிலை மணி வேதாரத்தினம், பல்கலைக்கழக உன்னத பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வேல் முருகன், நாகப்பட்டினம் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் பன்னீர்செல்வம், ப்ரியம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநா¢ பிரபு, வேதை சிம்காஸ் பனங்கிழங்கு உணவுகள் உற்பத்தியாளர் கார்த்திகேயன், தியாகி வைரப்பன் மகன் சண்முகம் மற்றும் குருகுல ஆசிரியர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
விழாவில் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அங்குள்ள தியாகி சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் உப்புத்துறை அலுவலகத்தில் உள்ள ராஜாஜி சிறைவைக்கப்பட்ட இடத்தையும் பின்பு ராஜாஜி உப்பு அள்ளிய இடத்தில் அமைக்கப்பட்ட நினைவு நினைவுத் தூணுக்கு சென்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகதுணைவேந்தர் கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டு வந்தே மாதரம் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. சர்தார் வேதரத்தினம் ஆரம்பிக் கப்பட்ட குருகுலத்திற்கு சென்று சர்தார் வேதரத்தினம் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அங்குள்ள கோசாலைக்கு சென்று பசு மாடுகளுக்கு கீரை பழங்களை வழங்கினார்.