உள்ளூர் செய்திகள்
சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சேலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள், கோவை மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்தபோது, அதே நூற்பாலையில் பணிபுரிந்த விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான வாலிபர் பாண்டி என்கிற பாண்டியன் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்ட போலீசார், சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து பாண்டியனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருமண ஆசைக்காட்டி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
வாழப்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள், கோவை மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்தபோது, அதே நூற்பாலையில் பணிபுரிந்த விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான வாலிபர் பாண்டி என்கிற பாண்டியன் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமி கடந்த 6-ந்தேதி மாயமானதாக பெற்றோர் வாழப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.