திருக்கோவிலூர் அருகே எரிசாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே எரிசாராயம் கடத்திய வாலிபர் கைது
பதிவு: ஜனவரி 25, 2022 16:33 IST
கைது
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீசார் ஒட்டம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த இருசன் மகன் விஜயகுமார் (வயது 29) என்பதும், அவர் 15 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.