உள்ளூர் செய்திகள்
கோரிக்கை மனுவுடன் பொதுமக்கள்.

வீடு கட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும்

Published On 2022-01-25 15:41 IST   |   Update On 2022-01-25 15:41:00 IST
திருமருகல் அருகே வீடு கட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மாதாகோவில் தெருவை சேர்ந்த வீடு இல்லாத 11 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம்  மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியுள்ளர். 

அதன்படி கிராம கணக்கில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்கி 3 மாதங்கள் கடந்தும் இன்றுவரை இடங்கள் பயனாளிகளுக்கு அளந்து வழங்கப்படாமல் உள்ளது. 

இதனால் அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் அவர்கள் தற்போது வரை வீடு கட்ட முடியவில்லை என தெரிவிக்கின்றனர். 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு இடத்தை அளந்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News