உள்ளூர் செய்திகள்
சேற்றில் சிக்கிய படகை இழுத்து வரும் மீனவர்கள்

கடற்கரையில் பரவியுள்ள சேற்றால் மீன்பிடி தொழில் முடக்கம்

Published On 2022-01-25 15:14 IST   |   Update On 2022-01-25 15:14:00 IST
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில் பரவியுள்ள சேற்றால் படகில் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் 65 விசைபடகுகளும் 1400 பைபர் படகுகளும் உள்ளன. மேலும் கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும்.

இந்த சீசன் காலத்தில் உள்ளூர் படகுகளுடன் வெளிமாவட்ட படகுகளும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஏற்கனவே நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் இரட்டைமடி சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்வதால் மீன் கிடைக்காததால் பல மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வெறும் கையோடு கரை திரும்புகின்றனர்.

சில மீனவர்கள் ஏதாவது மீன் கிடைக்குமா என்ற எதிர்பார்பில் இரண்டு நாள் தங்கி மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு தங்கி மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படை, இலங்கை கடற்கொள்ளையர்கள், இலங்கை தமிழ் சிங்கள மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சீனா நாட்டு மீனவர்களால் தாக்கபடுகின்றனர். தினந்தோறும் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்கள் அதை வெளியில் கூறுவதில்லை. 

அதற்கு காரணம் மீண்டும் மீன் பிடிக்க செல்லவேண்டும் என்ற அச்சம். தூப்பாக்கி சூடு, அரிவாள்வெட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனால் மட்டுமே கடலோரக் காவல் குழுமத்திற்கு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர் கள் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் சேறு தள்ளி உள்ளது. 

இதில் அதிகப்படியாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சேறு தள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக மீன்பிடிக்க முடியமால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே மீன் பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்களின் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

கடற்படையின் தாக்குதலு க்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம் கடற்கரையில் சேறுதள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர் இந்த நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்கள் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இலங்கை கடல் கொள்ளையர் களால் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நமது இந்திய கடலோர கப்பலை கோடியக்கரைக்கு அருகே நிறுத்தி மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு மீனவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காது, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீனவர்களின் மீன்பிடி தொழில் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

Similar News