சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் போலீசார் வாகன சோதனை செய்தபோது காரில் 480 மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே காரில் மது கடத்தியவர் கைது
பதிவு: ஜனவரி 25, 2022 14:57 IST
மாற்றம்: ஜனவரி 25, 2022 15:32 IST
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 10 பெட்டிகளில் 480 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதூர் காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பதும், கரிவலம்வந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.