உள்ளூர் செய்திகள்
பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

அகஸ்தீஸ்வரம் பகுதியில் 205 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

Published On 2022-01-25 14:52 IST   |   Update On 2022-01-25 14:52:00 IST
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 205 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி:

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் 205 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் நிகழ்ச்சி கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

இதில் கல்வி தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் திருமண உதவித் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் தாமரைபாரதி, பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 

இந்தநிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால், ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், குலசேகரபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி, 

கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News