உள்ளூர் செய்திகள்
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
விருதுநகர் முத்துராமலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40), எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி.
பாலமுருகன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. குடி பழக்கத்துக்கும் அடிமையானதாக தெரிகிற-து. அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன்&மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
மது பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கூறியும் பாலமுருகன் கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் செல்வி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற தால் விரக்தி அடைந்த பாலமுருகன் வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வீடு திரும்பிய செல்வி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாடி அறையில் பாலமுருகன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்