உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் ரெயில் மோதி முதியவர் பலியானார்.
அரக்கோணம்:
அரக்கோணம் கிருஷ்ணாம் பேட்டையை சார்ந்த கொள்ளாபுரி (80). இவர் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.