உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.

விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-23 07:19 GMT   |   Update On 2022-01-23 07:19 GMT
அறந்தாங்கியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் 41 ஆயிரத்து 486 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்த னர். அறுவடைக்கு தயாரான நேரத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. 

வேதனையடைந்த விவசாயிகள் சம்பவம் குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்வையிட்டு   இழப்பீடு குறித்து கணக்கீடு செய்து வந்தனர். 

இந்நிலையில் நீரில் மூழ்கி சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பயிர்க்காப்பீட்டுத்  தொகை வழங்க வலியுறுத்தியும், அறந்தாங்கி தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் 200&க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். 

Tags:    

Similar News