உள்ளூர் செய்திகள்
கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கந்தர்வக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம்

Published On 2022-01-23 12:39 IST   |   Update On 2022-01-23 12:39:00 IST
கந்தர்வக்கோட்டை பகுதியில் கால்நடை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை: 


கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி கால்நடை மருந்தக எல்லைக்கு உட்பட்ட பருக்கை விடுதி கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில் ராஜன், செந்தில்குமார், தினேஷ் குமார், பிரசாத், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அடங்கிய குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.   

முகாமில் 450 கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. 

முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், வளர்த்த விவசாயிகளுக்கும் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் அனைத்து கறவை மாடுகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

Similar News