உள்ளூர் செய்திகள்
கடும் பனிபொழிவின் காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலையில் செல்லும் வாகனங்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனிபொழிவு

Published On 2022-01-23 07:03 GMT   |   Update On 2022-01-23 07:03 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் குளிரும், பனியும் நிலவி வருகிறது. நேற்று இரவு முதல் கடும் குளிர் நிலவியதோடு, இன்று காலை சூரியன் உதித்தும் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. 

மேலும் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் காலையில் 8.30 மணி வரை தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினர். சிலர் ஸ்வட்டர், குல்லா அணிந்து குளிரில் நடுங்கியபடி சென்றனர். 

பெரம்பலூர் நகரில் இன்று காலை 8.30 மணி வரை பனிமூட்டம் விலகவில்லை. நகர் முழுவதும் வெள்ளைத்திரை போர்த்தியது போல் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகவும் குறைந்த வேகத்தில் சென்று வந்தன.  

பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நகரில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய் தாக்கத்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
Tags:    

Similar News