உள்ளூர் செய்திகள்
ஆசிரியை தைலம்மை வட்டார கல்வி அலுவலகதை சூறையாடிய காட்சி.

ஊதியம் வழங்காததால் அலுவலகத்தை சூறையாடிய ஆசிரியை

Published On 2022-01-23 06:51 GMT   |   Update On 2022-01-23 06:51 GMT
அறந்தாங்கி அருகே ஊதியம் வழங்காத ஆத்திரத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியை சூறையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி பகுதியைச் சேர்ந்தவர் தைலம்மை. இவர் மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிகாரிகளுக்கு முறையாக  பதில் அளிப்பதில்லை  என்ற  பல்வேறு காரணங்களால், வட்டாரக்கல்வி  அலுவலர்களால்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தைலம்மை, மணமேல்குடியிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணிணி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்துள்ளார். மேலும் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

அதோடு மட்டுமல்லாது அங்குள்ள யாரும் வேலை செய்யக்கூடாது என அலு வலர்களை மிரட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

ஆசிரியர் தைலம்மையின் இந்த நடவடிக்கை குறித்து, வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்பில் மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தைலம்மை ஏற்கனவே பள்ளிக்கு  வராமல் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News