ஆலங்காயம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
பதிவு: ஜனவரி 22, 2022 15:25 IST
கோப்புப்படம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது30). கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியைச் சேர்ந்த கனிமொழி (29). இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 2018&ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று கனிமொழியின் பெண் குழந்தை அழுது கொண்டிருந் ததாகவும் அதற்கு பால் கொடுக்க கோபி கூறியதன் பேரில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதில் கனிமொழி திடீரென்று படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொல்ல முயன்றார்.
உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி இறந்தார்.இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.