உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கமிஷனர் லதா, தாசில்தார் பழனிராஜன் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-01-22 09:32 GMT   |   Update On 2022-01-22 09:32 GMT
அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
அரக்கோணம்:

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில்  உள்ள குத்தகை அடிப்படையில் வாடகை கடை வியாபாரிகள்,  நடைபாதையை 3 அடிக்கு மேல் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இதனால் பஸ் நிலையத்தில் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார்கள் சென்றாலும் நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும்,  மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகுவதும் தொடர் கதையாகவே நடந்து வந்தன. 

இந்நிலையில் நேற்று நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தில் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகளின் முன்பாக 3 அடிக்கு மேல் உள்ள பகுதிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருக்கும் நடைபாதை வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடையின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா தலைமையில் தாசில்தார் பழனிராஜன், அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
Tags:    

Similar News