உள்ளூர் செய்திகள்
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்துள்ளது.

அரசால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் சேதம்

Published On 2022-01-22 08:44 GMT   |   Update On 2022-01-22 08:44 GMT
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில்  ஏற்பட்ட சுனாமியால் ஏராளமான உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் கடற்கரையை ஒட்டி இருந்த பலரும் 
வீட்டினை பறிகொடுத்து தவித்தனர்.

இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பிலும் பல்வேறு தன்னார்வ அமைப்பு சார்பிலும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அதன்படி வேளாங்கண்ணி ஏஞ்சல் நகர் பகுதியில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள்  உள்ளன. 
இந்த நிலையில் சில வீடுகள் சேதம் அடைந்து  வீட்டின் மேற்கூரை 
காரை  இடிந்து விழுந்துள்ளது.

மேலும் பல வீடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அச்சத்துடன் குடியிருப்புவாசிகள் வசிக்கும்  சூழலில் உள்ளனர். 

எனவே ஆபத்தான நிலையில் உள்ள சுனாமி குடியிருப்புகளை 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, 
புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என வேளாங்கண்ணி 
ஏஞ்சல் நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News