உள்ளூர் செய்திகள்
குளிர் சாதனப் பெட்டி வழங்கிய காட்சி.

கால் நடை மருத்துவமனைக்கு குளிர்சாதனம் பெட்டி

Published On 2022-01-22 12:14 IST   |   Update On 2022-01-22 12:14:00 IST
கால் நடை மருத்துவமனைக்கு குளிர்சாதனம் பெட்டி வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன் மற்றும் நன்கொடையாளர்கள் மாரிமுத்து, நட ராஜன், பரமசிவம் ஆகியோர் சார்பில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனப் பெட்டியை வழங்கினர். 

இதன் மூலம்   கால்நடைகளுக்கு  தேவைப்படும் உயர்ரக மருந்து மாத்திரைகள் வைப்பதற்கு இந்த குளிர்சாதன பெட்டி உதவியாக இருக்கும் என்றும், கால்நடைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று கால்நடை உரிமையாளர்கள் கூறினர்.

Similar News