உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கோவில் பூசாரி மர்மமரணம்

Published On 2022-01-22 12:14 IST   |   Update On 2022-01-22 12:14:00 IST
கோவில் பூசாரி மர்மமான முறையில் இறந்து சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம்  அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47). இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்தார். நேற்று மாலை  கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும் பவில்லை.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பதட்டம் அடைந்தனர். நீண்ட நேரம் ஆகியும் நடராஜன் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் விசாரித்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் எசனையிலிருந்து அனுக்கூருக்கு செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வயலில் ஒருவர் இறந்து கிடப்பதாக நடராஜனின் உறவினருக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது, நடராஜன் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது பற்றி பெரம்பலூர் போலீ சாருக்கு தகவல் கொடுத் தனர். போலீசார் இறந்த நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறகு இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, நடராஜனை யாராவது கொலை செய்து வீசி விட்டு சென்றிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்துள்ளாரா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மமான முறையில் கோவில் பூசாரி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News