உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-22 12:12 IST   |   Update On 2022-01-22 12:12:00 IST
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் கீதா, மாவட்ட தலைவர் சக்திவேல், ராமஜெயம், துரையரசன், ராஜமாணிக்கம்  உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News