உள்ளூர் செய்திகள்
காவல்நிலையத்தில் போலீஸ்காரருக்கு கத்தி குத்து
காவல்நிலையத்தில் போலீசாரை கத்தியால் குத்திய நபரை வலை வீசி தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காரக்கோட்டையை சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராமலிங்கம்(50) சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், குடும்ப தகராறு காரணமாக மணல்மேல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், முத்துராமலிங்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ராமமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் தான் வைத்திருந்த கத்தியால் காவலர் ராமூர்த்தியின் வலது கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த ராமமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முத்துராமலிங்கம் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.