உள்ளூர் செய்திகள்
நிலம் விற்றதில் ரூ.32 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு
நிலம் விற்றதில் ரூ.32 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நஞ்சூர் ரகதாம்பாள்புரத்தை «ர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு கீரனூர் அருகே உள்ள மகாதேவன்பட்டி கிராமத்தில் சொந்தமாக 2.75 ஏக்கர் நிலம் உள்ளது. இதை குளத்தூர் ஓடுகம்பட்டியை சேர்ந்த நில புரோக்கர் சுப்ரமணியன் மூலம் ஈரோடு மாவட்டம் செவந்திபாளையத்தை சேர்ந்த மணி என்பவருக்கு ரூ.37 லட்சத்திற்கு விலை பேசி முன் பணமாக ரூ.4.50 லட்சம் பெற்றுள்ளார்.
அதன்பின்னர் கடந்த 2019&ம் ஆண்டு பத்திரம் பதிவு செய்துள்ளார். ஆனால் பேசியபடி மீதி தொகையான ரூ.32.50 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மணியிடம் மீதி தொகையை பலமுறை கேட்டும் கொடுக்காததால் புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் அடிப்படையில் நில புரோக்கர் சுப்ரமணியன் மற்றும் மணி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.