உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி அருகே காட்டில் இருந்து தப்பி வந்த மிளாவை படத்தில் காணலாம்.

கன்னியாகுமரி அருகே காட்டு மிளா ஊருக்குள் புகுந்து அட்டகாசம், தேடும் பணி தீவிரம்.

Published On 2022-01-21 14:54 IST   |   Update On 2022-01-21 14:54:00 IST
கன்னியாகுமரி அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு மிளாவை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தையடுத்து உள்ளது முகிலன்குடியிருப்பு. இங்கு காட்டில் இருந்து தப்பி வந்த மிளா ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.

இந்த மிளா வீடுகளுக்கு உள்ளேயும் கடைகளுக்கு உள்ளேயும் புகுந்து பொருட்களை நாசம் செய்து கொண்டிருந்தது. மேலும் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளிலும் பாய்ந்து ஓடியது. உடனே இதுபற்றி அந்த ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் 8 பேர் கொண்ட வனத்துறையினர் அந்த கிராமத்துக்கு விரைந்துச் சென்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் மிளாவை தேடிக் கண்டுபிடிக்கும் வேட்டையில் 2-வது நாளாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் அந்த காட்டு மிளா அங்கிருந்து அருகில் உள்ள பறக்கை சரக்கல்விளை பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. எனவே அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

Similar News