உள்ளூர் செய்திகள்
தடுப்பூசிக்கு எதிராக போராட்டம்: சமூக அமைப்புகள் முடிவு
கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடத்த சமூக அமைப்புகள் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
கட்டாய தடுப்பூசிக்கு எதிரான போராட்ட குழு கூட்டம் தமிழர் களம் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் அழகர் தலைமையில் நடந்தது.
இதில், 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
இந்தியாவில் சித்தா, அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம் என பல மருத்துவங்கள் இருந்தும். ஆங்கில மருத்துவத்தை மட்டும் திணிப்பது சட்டப்படி குற்றமாகும்.
மத்திய அரசு நீதி மன்றத்தில் நாங்கள் மக்களை தடுப்பூசி போட கட்டாயப்படுத்தவில்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் புதுவை அரசு மாணவர்களையும்,அரசு ஊழியர்களையும்,பொது மக்களையும் கட்டாயப்படுத்தி வருகிறது. இதனை போராட்டக்குழு வன்மையாக கண்டிகின்றது.
இந்த செயலை கவர்னரும், புதுவை அரசும் உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால் கவர்னரின் செயலுக்கும், அவரின் வழிகாட்டுதலின்படி கட்டா யப்படுத்தும் அதிகாரி களுக்கு எதிராகவும் பல கட்ட போராட்டங்கள் நடத் தப்படும்.
மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.