உள்ளூர் செய்திகள்
கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும்: சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புத்தாண்டு கொண்டாட் டத்துக்கு முன்பு புதுவை மாநிலத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக மட்டுமே இருந்தது. அரசின் அலட்சியத்தாலும் பணத்தாசையாலும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு கொரோனாவை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்த பெருமை சுகாதாரத் துறையை கையில் வைத்திருக்கும் முதல்&அமைச்சரையே சாரும்.
தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயி ரத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
கொரோனா தொற்று அதிகரிப்பால் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் எண்ணிக்கை குறைக் கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மறைமுகமாக மருத்துவத்திற்கு செலவு செய்ய நேரிடுகிறது.
தற்போது புதுவை அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கொரோனாவின் தீவிரத்தை கணக்கில் கொண்டு புதுவை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியும் கொரோனா மருத்துவமனையாக விரைவில் மாற்றப்படலாம். இதனால் பிறநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனியார் மருத்துவ மனைக்கு செல்லும் நிர்ப் பந்தம் ஏற்படுகின்றது.
புதுவையில் உள்ள அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளும் புதுவை அரசாலும், புதுவை மக்களாலும் அதிக பலன் அடைந்துள்ளனர். அவர்கள் பொதுமக்களுக்கு இக்கட்டான சூழலில் உதவ வேண்டியது அவர்களின் அடிப்படை கடமையாகும்.
தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா பாதிப்பு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் இந்த பேரிடர் காலம் முடியும் வரை அவர்களின் முழு மருத்துவ செலவையும் அந்தந்த தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகமே ஏற்க வேண்டும் அல்லது அரசு ஏற்க வேண்டும்.
இது குறித்து முதல்&அமைச்சர் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.