உள்ளூர் செய்திகள்
போலீஸ் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.

புதுவை காவல்துறையில் போலீஸ் தேர்வு

Published On 2022-01-19 08:35 GMT   |   Update On 2022-01-19 08:35 GMT
புதுவை காவல்துறையில் போலீஸ் தேர்வு- தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீஷியன்கள் உள்பட  431 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று  கோரிமேடு ஆயுதப்படை  மைதானத்தில் தொடங்கியது. 

 20 நாட்களுக்கு தேர்வு நடக்கிறது. காலை 6 மணிக்கே வந்த தேர்வர்கள் மைதானத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு அனுமதிக் கப்பட்டனர். கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 

உடல் எடை,  உயரம், மார்பு அளவு குறித்த பின் நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டம், கயிறு ஏறுதல் போன்ற உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  தேர்வை நேர்மையாக நடத்த டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பட்டை அணிவிக்கப்பட்டு துல்லியமாக உடல் தகுதி தேர்வு குறிக்கப்பட்டது. 

தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்கு வந்தவர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை.  தேர்வு நடத்தும் போலீசாரும் மொபைல் போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு சுழற்சி அடிப்படையில் பணிகள் மாற்றி வழங்கப்பட்டது.  முதல் நாளில் 500 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நாள்தோறும் 750 பேர் வீதம் உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 

7 1/2  ஆண்டுக்கு பிறகு புதுவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு நடைபெறுவதால் விண்ணப்பித்தவர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News