உள்ளூர் செய்திகள்
லட்சுமிபுரம் அணைக்கட்டில் வெள்ளம் பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி கடலில் கலந்த 15 டி.எம்.சி. தண்ணீர்

Published On 2022-01-19 04:08 GMT   |   Update On 2022-01-19 04:08 GMT
லட்சுமிபுரம் அணைக்கட்டில் தண்ணீர் சில நாட்கள் மட்டுமே பாய்ந்து நின்று விடும். இந்த அணைக்கட்டு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து ஆரணி ஆற்றில் மழைநீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தது.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் 77 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் பாய்வது வரலாறு சாதனையாக இருந்தாலும் 15 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நகரி மலையில் உள்ள கார்வெர்ட் நகரில் ஆரணி ஆறு தோன்றி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் நுழைந்து லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியாக பாய்ந்து வங்ககடலில் கலக்கிறது.

லட்சுமிபுரம் அணைக்கட்டில் தண்ணீர் சில நாட்கள் மட்டுமே பாய்ந்து நின்று விடும். இந்த அணைக்கட்டு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து ஆரணி ஆற்றில் மழைநீர் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர்மழையால் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது. பின்னர் கடந்த 77 நாட்களாக தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

இப்படி வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இவ்வாறாக 15 டி.எம்.சி. தண்ணீர் வெளிறேி கடலில் கலந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கினால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் விளை நிலங்களும் பாசனவசதி பெறும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News