உள்ளூர் செய்திகள்
சிறுவனை பாராட்டி சான்றிதழ் வழங்கிய விஜய் வசந்த் எம்.பி.

சாதனை சிறுவனை கவுரவித்த விஜய் வசந்த் எம்.பி.

Update: 2022-01-17 15:55 GMT
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தனது அலுவலகத்தில் செல்வன் தீரஜை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கினார்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் செல்வன் தீரஜ்  இசை, நாட்டியம் என பல துறைகளில் சாதனைகள் படைத்து வருகிறான்.  சமீபத்தில் அவன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் பல பாராட்டுகளை பெற்றது. 

இந்நிலையில், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தனது அலுவலகத்தில் செல்வன் தீரஜை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கினார்.

கொரோனா விழிப்புணர்வுப் பாடல் மூலம் தீரஜ், இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். சிறுவன் தீரஜ்-க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு தெரிவித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News