உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் இரவு ஊரடங்கில் இயங்கிய 4 பஸ்களுக்கு அபராதம்

Published On 2022-01-17 15:41 IST   |   Update On 2022-01-17 15:41:00 IST
இரவு ஊரடங்கை மீறி பஸ் இயக்கியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்
கோவை:

தமிழகத்தில் 15-ந் தேதி இரவு 10 மணி முதல் இன்று (17-ந் தேதி) காலை 5 மணி வரை பொது ஊரங்கு அமலில் இருந்தது. இதனால் தமிழகத்தில் பொது போக்குவரத்துத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பஸ்கள் இயக்கப்படவில்லை.  ஆனால் சில ஆம்னிப் பஸ்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் செய்து பஸ்களை இயக்கி உள்ளனர். 

இது குறித்து  கோவை சரகம்  இணைப்போக்குவரத்து ஆணையருக்கு புகார் கிடைத்தது. அடிப்படையில் ஆம்னிப் பஸ்களின் இயக்கம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தணிக்கையின் போது சட்டத்திற்கு புறம்பாக 4 ஆம்னிப் பஸ்கள் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து பஸ்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விதிகளை மீறி பஸ்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தெரிவித்தார்.

Similar News