உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி உப்பளங்களில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்

Published On 2022-01-17 09:45 GMT   |   Update On 2022-01-17 09:45 GMT
முள்ளக்காடு உப்பளங்களில் சமீப காலங்களில் மின் மோட்டார்கள், வயர்கள், குழாய்கள் திருடுபோவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முள்ளக்காடு கோவளம் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முள்ளக்காடு:

தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சரகம் பகுதியில் தனியாக வரும் முதியவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக ராஜீவ் நகர் அபிராமிநகர் பகுதிகளில் அதிக அளவில் நடந்து வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்து வருகிறது.

இதுபோல முள்ளக்காடு உப்பளங்களில் சமீப காலங்களில் மின் மோட்டார்கள், வயர்கள், குழாய்கள் திருடுபோவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து முள்ளக்காடு கோவளம் உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் உப்பள பகுதியில் தொடர்ந்து திருடு போய்க்கொண்டிருக்கிறது. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது.

எனவே இது குறித்து விசாரணை செய்து திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் எம்.சவேரியார்புரம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்கள் கத்தியுடன் மோதிக்கொள்ளும் சம்பவங் களும், பொதுமக்களை மிரட்டும் வகையில் போதையில் சிலர் ஆயுதங்களுடன் கும்பலாக சுற்றுவதும் அதிகரித்து வருகிறது.
 
இதனால் இப்பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள் உப்பு உற்பத்தியாளர்கள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News